Pages

அப்பாடெக்கர் மோடியின் ’தி ஆபரேசன் ஓப் உத்தர்கண்ட்’ கோவணம் அவிழ்ந்தது..!!!

Wednesday, June 26, 2013

பிஜேபியின் பிரதம மந்திரி வேட்பாளராக முனையும் முயற்சியில் உத்தர்கண்டில் வெள்ள பெருக்கெடுத்து ஓடும் மண்ணில் ஆடிய நாடகம் வீதிக்கு வந்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கோமாளியாக சித்தரிக்கப்பட்டு ஊடகங்களில் சந்தி சிரித்து கொண்டு இருக்கிறார்.


அமெரிக்கன் பப்ளிக் ரிலேசன் கம்பெனியான ”ஆப்கோ”வின் அறிவுரைப்படி ஊடகங்களில் மிகுந்த விளம்பரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் படை கிளப்பிய மோடியின் ’ஆப்ரேசன் ஓப் உத்தர்கண்ட்’ இப்பொழுது ஊடகங்களில் சந்தி சிரித்து மோடியை ஒரு கோமாளியாக சித்தரித்து கொண்டு இருக்கிறது.


மத்திய உள்துறை அமைச்சகமும்,ராணுவ அமைச்சகமும் சேர்ந்து நடத்திக்கொண்டு இருக்கும் மீட்பு பணிகளுக்கும்,நிவாரண பணிகளுக்கும் இடையூறு ஏற்படும் என்ற காரணத்தினால் பிற மாநில முதல்வர்கள் உத்தர்கண்டிலேக்கு செல்ல சுசில் குமார் ஷிண்டே தடை விதித்து இருந்தார்.

ஆனால்,பிஜேபியின் பிரதம வேட்பாளாராக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள இதுவே தக்க சமயம் என்பதனை உணர்ந்து கொண்ட மோடி தடையை மீறி உத்தர்கண்டிலேக்கு சென்றார்.ஹெலிகாப்டரில் உத்தர்கண்டை வட்டமடித்து விட்டு குஜராத்திற்கு திரும்பி வந்த போது 15,000 குஜராத்தியர்களை காப்பாற்றி குஜராத்திற்கு பத்திரமாக அழைத்து வந்ததாக பொய் மூட்டையை அவிழ்த்து விட்டும் இருந்தார்.குஜராத அரசிடம் ஒப்படைத்தால் கேத்தரிநாத் ஆலயத்தை அசியாவிலேயே சிறந்த ஆலயமாக புணரமைத்து தருவேன் என்றும் அள்ளி விட்டு இருந்தார்.

மோடியின் பி.ஆர்.ஓக்கள் நடத்திய பரப்புரைகளை அப்படியே ஏற்றெடுத்த ’டைம்ஸ் ஆப் இந்தியா’ போலுள்ள தேசிய ஊடகங்களுக்கு

மோடி சொன்னது அத்தனையும் பொய் என்றும் மக்களிடம் விளம்பரம் தேட நடத்திய நாடகம் என்று அறிந்து கொள்ள சில மணித்துளிகள் காத்திருக்கத்தான் வேண்டி வந்தது.

8500 ராணுவ வீரர்கள்,60 உலங்கு வாணூர்த்திகளை கொண்டு பல நாட்கள் கடும் போராட்டங்களுக்கு மத்தியில் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கையே வெறும் 20,000 தான் என்று அரசு வட்டாரங்கள் அறிவித்த அந்த சமயத்தில் தான் 

விரல் விட்டு எண்ணக்கூடிய ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் சென்ற மோடி இரண்டு தினங்களில் 80 இன்னோவா வாகணங்களை உபயோகித்து 15,000 குஜராத்தியர்களை காப்பாற்றி விமானம் மூலம் குஜராத்திற்கு அழைத்து வந்தோம் என ஒரு போடு போட்டிருந்தார்.

ஏழு பேர்கள் வரை இருக்க கூடிய 80 இன்னோவா வாகணங்களை ஒரு முறை பயணத்திற்கு பயன்படுத்தினால் 560 பேர்கள் குஜராத்தில் வந்தடைந்து இருக்க முடியும்.

மோடி ஏற்பாடு செய்து இருந்த முதல் ’சார்டர்’ விமானம் 134 தீர்த்தாடகர்களை கொண்டு சனிக்கிழமை அன்று தான் குஜராத்திற்கு வந்தடைந்தது.
15,000 பேர்களை காப்பாற்றிக்கொண்டு வர 115 விமானங்கள் தொடர்சியாக 36 மணி நேரங்கள் அஹமதாபாத்திற்கு சேவைகள் செய்து இருக்க வேண்டும்.

குஜராத்திகளை கொண்டு வர எத்தனை விமானங்கள், எத்தனை முறைகள், எத்தனை மணி நேரங்கள் பயன்படுத்தப்பட்டன? என்ற கேள்வியை மோடியின் முன்னிலும்,ஆலோசனை வழங்கிய அமெரிக்கன் கம்பெனிக்கு முன்னிலும் வைத்த போது பதில் சொல்ல முடியாமல் இருவரும் திகைத்து முழிக்க ஆரம்பித்து விட்டனர்.இதுவரை பதிலும் சொல்லவில்லை என்பது தனிச்செய்தி!


மீட்டுப்பணி நாடகம் முடிந்து மோடி உத்தர்கண்டிற்கு நிவாரன நிதியாக வழங்கியதோ 2 கோடி ரூபாய்கள்.

தரித்திர மாநிலமான பீகார் மாநிலம் வழங்கியதோ 5 கோடி ரூபாய்கள்.இந்தியாவிலேயே பணக்கார மாநிலம் குஜராத் என்று சுய தம்பட்டம் அடித்து கொள்ளும் வேளையில் தான் இரண்டு கோடி ரூபாய்கள் மோடியால் கொடுக்கப்பட்டது என்பது மற்றொரு கேவலம்.
இதனிடையே வளர்ச்சி பாதையில் குஜராத்தை விட மிகவும் பின் தங்கிய மாநிலமான உத்தரபிரதேஷ் 25 கோடி ரூபாய்களும்,
மஹராஷ்டிரா,ஹரியானா,டெல்லி ஆகிய மாநிலங்கள் தலா 10 கோடி ரூபாய்களும் வழங்கிய செய்திகளும் வெளிவந்தன.

நிதிஷ் குமார்,அகிலேஷ் யாதவ்,பிருத்திவி ராஜ் சவான்,ஜெயலலிதா ஆகியார்கள் தாங்கள் செய்த நிவாரன உதவிகளை வெளியில் சொல்லி விளம்பரம் தேடி கொள்ள முயற்சி எடுக்காத போது மோடியின் இந்த விளம்பர தம்பட்டம் சிறுமைத்தனமான செயலாகவும் அமைந்து இருக்கிறது.


அதேபோல மோடியின் பொய் பிரச்சாரங்களை அப்படியே ஏற்றெடுத்த ஊடகங்களின் நம்பகத்தன்மையும் கேள்வி குறியாகி சங்கடத்தில் ஆழ்த்தியும் இருக்கிறது.

சில ஊடகங்கள் தொடகத்தில் மோடியின் டுபாக்கூர் செய்திகளை பிரசுரித்த செய்திகளுக்கு மறுப்பு செய்திகளையும் வெளியிட்டு கொண்டு இருக்கிறது.!!!


http://articles.timesofindia.indiatimes.com/2013-06-24/india/40165548_1_gujarati-pilgrims-narendra-modi-rambo


## சில ஊடக விபச்சாரர்களின் துணை கொண்டு பொய்யான செய்திகளை பரப்பும் மோடி போன்ற இரண்டாம் தர அரசியல் வாதியை இதுவரை இந்தியா கண்டதில்லை.

அதுவும் இழவு வீட்டில் விளம்பர பலகை வைக்கும் மகா மட்டமான அரசியல்வியாதி மோடியாகத்தான் இருக்கமுடியும்.

கூடவே,120 கோடி மக்களையும் முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டு ஆடும் மோடியின் அரசியல் பொய் நாடகங்களும் அதற்கு விளக்கு பிடிக்கும் ஊடகங்களும் இந்தியாவை எங்கு கொண்டு நிறுத்த போகிறது என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது.

அய்யோ பாவம் குஜராத்திகள்...!!! ##

2 comments:

  1. I am not a admirer of MOdi .. But labelling Modi as the first one to hold public stunts is too immature. Public stunts are politicians bramastras.. and modi has godfathers in public stunts in Karunanathi, Advani, Nehru Family .. (ooops they are Ghandiss .. lol ) .. but he is moving out of traditional emotional bound public stunts to a public stunts flavored with percieved growth. he is wise .. he knws that unemployment is next major issue in India... heheh. politicinas zindabad ... India ZiiiiiiiiindaBAD.... btw.. i wud like to reemind a famous quate.. Democacy does not give a govt u desire.. but a govt we deserve..

    ReplyDelete